districts

img

சேறும் சகதியுமான சாலை: பேருந்தை மறித்து மக்கள் போராட்டம்

கடலூர்,நவ.8- கடலூர் அருகே கிழக்கு ராமாபுரத்தில் சேறும் சகதியுமான சாலையை சீரமைத்து தரக் கோரி அரசு பேருந்தை மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வரு கிறது. இந்த நிலையில், கடலூர் அருகே கிழக்கு ராமாபுரம் கிராமத்தில் பல ஆண்டு காலமாக சாலை வசதி, வடிகால் வசதி அமைத்துத் தரக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. பள்ளி செல்லும்  மாணவர்கள் சிரமத்தோடு சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. முதியோர்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த கிராம மக்கள் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு நகரப் பேருந்தை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கை நிறைவேற்ற அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை அடுத்து கலைந்து சென்றனர்.