districts

img

அரசாணைப்படி பட்டா வழங்கவேண்டும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை, டிச. 20- அரசாணைப்படி குடி மனை பட்டா வழங்க அரசு முன்வர வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தினார். சென்னை ராயபுரம் 49, 52, 53ஆவது வட்டத்தில் வசிக்கும் மக்க ளுக்கு குடிமனைபட்டா வழங்கக் கோரி  தண்டையார்பேட்டையில் உள்ள வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாயன்று (டிச. 20) நடைபெற்றது. போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பேசிய அவர், 60, 70 ஆண்டுகளாக 3 தலை முறைகளாக குடியிருப்ப வர்களுக்கு அரசு பட்டா வழங்க மறுக்கிறது. வெள்ளையர்கள் ஆளும் போது மெட்ராஸ் ஸ்டேட் (சென்னை மாநிலம்) என்றுதான் இருந்தது. பின்னர்தான் என மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அழகு தமிழில் தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும், தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு குடியிருக்க வீட்டு மனை பட்டா வழங்க மறுப்பது என்ன நியாயம் என கேள்வி எழுப்பினார். சென்னை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியின் மாநிலச் செய லாளர் என்.வரதராஜன் தலைமையில் மாநாடு நடத்தி குடிமனை பட்டா கேட்டு வட்டாட்சியர் அலு வலகத்தில் மனு கொடுப்பது என்று அறிவிக்கப்பட்டது. அப்போது 25 லட்சம் பேர் மனு அளித்தனர். அதை யொட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

அதையொட்டி அரசு 854 அரசாணை வெளியிட்டது. ஏரி புறம்போக்கு, ஆற்று புறம்போக்கு, குட்டை புறம்போக்கு இல்லை யென்றால், இந்த இடம் அரசுக்கு பயன்படாது என்றால் அந்த இடத்திற்கு பட்டா வழங்கலாம் என அந்த அரசாணை கூறுகிறது. அதனடிப்படையில் இங்கு வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவதில் என்ன பிரச்சனை இருக்கிறது. எனவே அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வில்லை என்றால் என் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் எச்சரித்தார். வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர் ராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராம கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, டி.வெங்கட் (அமைப்பு சாரா) ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசி னர். இதில் நிர்வாகிகள் பி.செல்வம், எம்.அண்ணா மலை, ச.முருகேசன், ஜே.பிரேமாவதி, அ.அழகு பாண்டி, எம்.எஸ்.ஜூகைப், சா.நீதிதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;