districts

சிறப்பு பேருந்துகள் இயக்கம்: கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்

சென்னை,அக்.19-  தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகத்தி லுள்ள பகுதிகளுக்கு 21 ஆம் தேதி  முதல் 23 ஆம் தேதி வரை 3 நாட்க ளுக்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் மற்றும் அரசு விரைவு  போக்குவரத்துக் கழகம் சிறப்புப் பேருந்துகள் 6 இடங்களிலிருந்து இயக்கப்பட உள்ளது.  கோயம்பேடு செல்லும் அரசு  பேருந்துகள் வண்டலூர் மேம்பாலம்,  இரும்புலியூர், மதுரவாயல், டோல்பிளாசா, கார்த்திகேயன் நகர்,  எம்.ஜி.ஆர் யுனிவர்சிட்டி, நெற்குன்றம், பூந்தமல்லி புறவழிச் சாலை (பைபாஸ்) அருகில் நிறுத்தப்படும்.  மேலும் அதிகப்படியான கோயம்பேடு நோக்கி வரும் பேருந்து கள் மதுரவாயல் மேம்பாலம், வானகரம் இயேசு அழைக்கிறார் வளாகம், கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு மலர் வணிக வளாகம், கோயம்பேடு காவல் நிலையத்தின் அருகில் உள்ள இடம்  ஆகிய இடங்களில் நிறுத்தி வைத்து  அங்கிருந்து கோயம்பேடு பேருந்து  பணிமனைக்கு உள்ளே அனுமதிக் கப்படும்.  ஆம்னி பேருந்துகள் கோயம் பேடு மார்க்கெட், இ-ரோட்டில் உள்ள  நிறுத்தத்தில் இருந்து, பி-ரோடு வழியாக, பூந்தமல்லி நெடுஞ்சாலை சென்று அங்கிருந்து வெளிவட்ட சாலை, (நசரத்பேட்டை) வழியாக ஊரப்பாக்கம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்லலாம். பூந்தமல்லி நெடுஞ் சாலையில் பூந்தமல்லியில் இருந்து  கோயம்பேடு நோக்கி வரும் கனரக  மற்றும் இலகுரக சரக்கு வாகனங் கள் மதுரவாயல் புறவழிச்சாலை வழி யாக அம்பத்தூர் நோக்கி திரும்பி சென்று அவரவர் அடைய வேண்டிய  இடத்திற்கு செல்ல வேண்டும்.  மாதவரம் ரவுண்டானா மற்றும் மாதவரம் மேம்பாலம் வழியாக 100 அடி சாலைக்கு வரும் கனரக சரக்கு வாகனங்கள் ஜி.என்.டி ரோடு,  காவாங்கரை, செங்குன்றம் வழியாக  வெளிவட்ட சாலை மார்க்கம் செல்ல வேண்டும். 100 அடி சாலை  பாடி மேம்பாலம் வழியாக கோயம்பேடு நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் பாடி மேம்பால சந்திப்பில் சி.டி.எச் சாலை வழியாக திரும்பி செல்ல வேண்டும். கோயம் பேடு மேம்பாலத்திலிருந்து 100 அடி  சாலை நோக்கி வரும் சரக்கு வாக னங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் இ.வி.ஆர். சாலை வழியாக தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும்.  பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேட்டை நோக்கி வரும் சரக்கு வாகனங்கள் நடுவாங்கரை சந்திப்பு மற்றும் நெல்சன் மாணிக் கம் சாலை மேம்பாலம் வழியாக அண்ணாநகர் 3-வது அவென்யூ, 2-வது அவென்யூ, சாந்தி காலனி, அம்பத்தூர் எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள தனியார் வாகனங்கள் இ.வி.ஆர். சாலையில் மதுரவாயல்  நோக்கி செல்பவர்கள் நடுவாங்கரை  சந்திப்பு, சாந்தி காலனி, 13-வது  மெயின் ரோடு, 2-வது அவென்யூ சாலை, எஸ்டேட் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்ல அறிவு றுத்தப்படுகிறார்கள். அதேபோல் வடபழனி நோக்கி செல்லும் தனியார்  வாகனங்கள் என்.எஸ்.கே நகர் சந்திப்பு ரசாக் கார்டன், எம்.எம்.டி.ஏ. காலனி, விநாயகபுரம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

;