சிதம்பரம், ஜூன் 8-
சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட 27 வது வார்டு 8 ஆவது தெருவில் புதி தாக நகர்ப்புற நல்வாழ்வு மையம் கட்டப்பட்டுள்ளது. இதனை சென்னை தலைமைச் செய லகத்திலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிதம்பரம் நகர்மன்ற தலைவர் கே. செந்தில்குமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகராட்சி பொறியாளர் மகாராஜன், சிவக்கம் வட்டார மருத்துவ அலு வலர் மங்கையர்கரசி, நகர்மன்ற உறுப்பினர்கள் தில்லை ஆர்.மக்கீன், அப்பு. சந்திரசேகரன், ஏ.ஆர்.சி மணிகண்டன், சி.கே. ராஜன், திமுக நகர துணைச் செயலாளர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.