சென்னை, ஜன. 31 - மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் கே. காசியின் தாயார் மனோன்மணி சண்முகம் செவ்வாயன்று (ஜன.30) காலமானார். அவருக்கு வயது 86. பழைய பெருங்களத்தூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுக நயினார், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா. கிருஷ்ணா, மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொரு ளாளர் பாலாஜி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அன்னாரது உடல் புதனன்று (ஜன.31) பழைய பெருங்களத்தூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.