districts

பெருங்குடியில் வழக்கறிஞர் கொலை: 3 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம், மார்ச்.27- சென்னை பெருங்குடி ராஜீவ் நகரைச்  சேர்ந்த ஜெய் கணேஷ்(33) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 25ஆம்  தேதி சைதாப்பேட்டை நீதிமன்ற வளா கத்தில் வழக்கறிஞர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில்  விளையாடிய ஜெய் கணேஷுக்கும், சக வழக்கறிஞர் ஒருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இரவு 9 மணியளவில் ஜெய் கணேஷ் வீட்டருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல், திடீரென  அவரை வெட்டிவிட்டுத் தப்பியது. இது குறித்து துரைப்பாக்கம் காவல் துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் நீதி மன்றத்தில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதியைச் சார்ந்த  முருகன் (26), நுங்கம்பாக்கம் தெற்கு  மாடவீதியை சேர்ந்த பிரவீன் (23), சென்னை மண்ணூர்பேட்டை, பெருமாள் கோயிலை சேர்ந்த ஸ்ரீதர் ஆகியோர் நீதிபதி  ராதிகா முன்னிலையில் சரணடைந்தனர். இதையடுத்து வரும் 5ஆம் தேதி வரை நீதி மன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையினர் சிறைக்கு அழைத்து சென்றனர், அப்போது அங்கிருந்த வழக்கறிஞர்கள், அவர்கள் மீது திடிரென தாக்குதல் நடத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

;