districts

img

ஆசிரியர்களுக்கு பாராட்டு

சென்னை, செப்.10- சென்னையில் உள்ள கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சென்னையில் உள்ள 50 பள்ளிகளைச் சேர்ந்த 150 ஆசிரியர்கள் சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி கவுரவித்தது. சென்னையில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் அவர்களுக்கு சிறப்பு விருதுகளும், மருத்துவ சுகாதார கூப்பன்களையும் கிளெனேகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலோக் குல்லர் , துணைத் தலைவர் பாஸ்கர் ரெட்டி வாகா ஆகியோர் வழங்கினர். மேலும் அனைத்து ஆசிரியர்களுக்கும் சிகிச்சை மேற்கொள்ள  சிறப்பு சலுகை அட்டையும் வழங்கப்பட்டது. ஒரு தனிநபரின் ஆளுமையை வடிவமைக்கும் ஆசிரியர்களை பாராட்டி கவுரவிப்பதோடு, பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் கொண்டு செல்வதிலும்  மருத்துவமனை அதிக கவனம் செலுத்தி வருவதாக மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி அலோக் குல்லர் கூறினார்.