districts

img

கல்பாக்கம் அணுமின் நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டக் கூலி சிஐடியு சார்பில் பெருந்திரள் முறையீடு

கல்பாக்கம், ஏப் 13 – கல்பாக்கம் அணுமின் நிலைய பகுதிகளில் பணி செய்துவரும் ஒப்பந்த ஊழி யர்களுக்கு சட்டக் கூலியை வழங்கிட வலியுறுத்தி சிஐடியு சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. தொழிலாளர்கள் சங்கம் அமைத்து சடடக்கூலி உள்ளிட்ட உரிமைகளை கேட்டதால் 8 பம்ப் ஆப்ரேட்டர்கள், எட்டு பெண் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த பணியா ளர்களுக்கும் நிர்வாகத்தின் ஆணைப்படி ரூ. 474,  அன்ஸ்கில்டு தொழிலாளர்க ளுக்கு ரூ. 642, செமி ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ.749, ஸ்கில்டு தொழிலாளர் களுக்கு ரூ. 773, ஹய் ஸ்கில்டு தொழிலாளர்களுக்கு ரூ.798 வழங்கிட வேண்டும், போனஸ், இஎஸ்ஐ, இபிஎப் உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட பம்ப் ஆப்ரேட்டர்கள், பெண் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கம் அட்டாமிக் எனர்ஜி கான்ட் ராக்ட் ஒர்க்கர்ஸ் மற்றும் லேபர் யூனியன் இந்த போராட்டத்தை நடத்தியது. சங்கத்தின் தலைவர் கே. பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் கலா வதி, சிஐடியு மாவட்டக் குழு  உறுப்பினர் சி.செல்வக் குமார், மோட்டார் வாகன  சங்க மாவட்டப் பொருளா ளர் டி.இருசப்பன் உள்ளிட் டோர் பேசினர். நிறைவாக சிஐடியு மாவட்டச் செயலா ளர் க.பகத்சிங்தாஸ் பேசி னார். முன்னதாக சங்கத்தின் நிர்வாகிகள் அணுசக்தித் துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்.

;