districts

img

சிபிஎம் வேலூர் வட்டச் செயலாளராக கே.பாண்டுரங்கன் தேர்வு

வேலூர்,அக்.18- மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி  வேலூர் தாலுகா குழு (வடக்கு) 23வது மாநாடு ரங்கா புரத்தில் தோழர் கே.தங்கவேல் நினைவரங்கில் நடைபெற்றது. எம்.வளர்மதி கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். என்.கன்னியப்பன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். கே.துரைசாமி, பி.திருநாவுக் கரசு தலைமையில், கே.பாண்டுரங்கன் வரவேற்றார். மாவட்டச்  செயலாளர் எஸ்.தயாநிதி துவக்க உரையாற்றினார். செயலாளர் அறிக்கையை வட்டச் செயலாளர் வி.நாகேந்திரன், நிதிநிலை அறிக்கையை மு.காசியும் முன்வைத்தனர். மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன் பேசினார்.  9 பேர் கொண்ட புதிய இடைக்குழுவுக்கு செயலாளராக  கே.பாண்டுரங்கன் தேர்வு செய்யப்பட்டார். வேலூர் அலமேலுமங்காபுரம் விளாவடி ஏரியில் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவுநீர் சேராமல் தடுத்து, ஏரியை தூர்வாரி, கரையை பலப்படுத்த வேண்டும். பாலாற்றில் இருந்து விளாவடி ஏரிக்கு நீர் வரும் நிக்கல்சன் கால்வாயை தூர்வார வேண்டும். சத்துவாச்சாரி - காங்கேயநல்லூர் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைகள் சீரமைப்பின் போது  தலைமைச் செயலாளர் வழிகாட்டுதலின் அடிப்படையில் பழைய சாலைகள்  மீது போடாமல் அதனை பெயர்த்துவிட்டு புதிய சாலையை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;