districts

img

உலக விண்வெளி வார விழாவையொட்டி விஐடியில் நடைபெற்ற  இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சி

உலக விண்வெளி வார விழாவையொட்டி விஐடியில் நடைபெற்ற  இஸ்ரோவின் 3 நாள் கண்காட்சி நிறைவடைந்தது.  வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தின் முதன்மை பொதுமேலாளர் சங்கரன், பல்கலைக்கழக துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், இணை துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் இஸ்ரோ அதிகாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அறிவியல் தொழில்நுட்பம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.