சென்னை, ஜூலை 20- உயர் செயல் திறன் கொண்ட ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் ஐக்யூஓஓ நிறுவனம், தனது இசட் மாடல் வரிசையில் புதிதாக ஐக்யூஓஓஇசட்9 லைட் 5ஜிஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் சக்திவாய்ந்த புராசசர், நட்சத்திர வடிவமைப்பு மற்றும் சோனி முதன்மை கேமராவுடன் முதல் முறையாக 5G பயனர்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விற்பனை 20-ந்தேதி அமேசான். இன் மற்றும் ஐக்யூஓஓஇ-ஸ்டோர்களில் துவங்கியது. இதன் துவக்க விலை ரூ.9,999 ஆகும்.