districts

img

கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

சென்னை, செப். 19 - மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்களில் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், நீர்வழிக் கால்வாய்கள் மற்றும் ஏரிகள் போன்ற நீர்நிலைகள் பொதுப் பணித்துறை மற்றும் மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதிகளில் சேரும் மழைநீர், மழைநீர் கால்வாய்களின் வழியே கொண்டு சென்று நீர்வழிக் கால்வாய்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது. பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக, நீர்நிலை கள் மற்றும் மழைநீர் வடி கால்களில் உள்ள வண்டல் கள், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. நீரிலும், நிலத்திலும் இயங்க கூடிய ரொபோட்டிக் எக்ஸ்கவேட்டர், ஆம்பிபி யன், பொக்லைன் போன்ற நவீன இயந்திரங்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்  படுகிறது. இதன்படி, 23 நீர்நிலை களில் கடந்த மூன்று மாதங்க ளில் பருவமழை முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரத்து 775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல், ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த நீர்வரத்துக் கால்வாய்கள் செல்லும் முக்கிய சாலை களில் பல்வேறு இடங்க ளில் குறுக்குப் பாலங்கள் உள்ளன.

;