districts

img

விவசாயிகளுக்கு உடனடியாக கடன் பெடரல் வங்கி வழங்குகிறது

சென்னை, செப். 19- தமிழ்நாட்டின் குறிப்பிட்ட சில மாவட்டங்க ளில் ஊரக (கிராமப்புற) நிதி வழங்கலை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை ரிசர்வு வங்கி வழி காட்டுதலில் பெடரல் வங்கி தொடங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசின் டிஜிட்டல் ஆவணங்கள் வலைதளம் உதவியுள்ளது. ரிசர்வ் வங்கியின் புத்தாக்க கண்டுபிடிப்பான இன்னோவேஷன் ஹப்-ஆல் உருவாக்கப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பு நட வடிக்கையின் முன்னோடித் திட்டமானது, சென்னையில் திங்களன்று  நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகள் தாக்கல் செய்யும் ஆவணங்களை தமிழக அரசு டிஜிட்டல் மய மாக்கியுள்ள பட்டா சிட்டா அடங்கல் ஆகியவற்றோடு ஒப்பிட்டு பார்த்து 10 நிமிடங்களில் கடனுக்கான அனுமதி வழங்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு கடன் தொகை வரவு வைக்கப்படுகிறது என்று பெடரல் வங்கியின் தலைமை செயல் அலுவலர் ஷியாம் சீனிவாசன் கூறி னார். 4விழுக்காடு வட்டி யில் கடன் வழங்கப்படு வதாகவும் அவர் தெரி வித்தார். சென்னை,மதுரை, ஓசூர்ஆகிய இடங்களில் முன்னோடி திட்டமாக இந்த கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.  வேளாண்  கடன் வழங்க லில் தற்போது இருந்துவரும் பாரம்பரியமான வழிமுறை யோடு ஒப்பிடுகையில் விவ சாயிகளுக்கு இது ஒரு புதிய அணுகுமுறையாக இருக்கும். தொடக்கத்திலி ருந்து முடிவு வரை விரி வான டிஜிட்டல் மற்றும் காகித பயன்பாடு இல்லாத திட்டம் இது என்று ரிசர்வு வங்கியின் புத்தாக்க கண்டுபிடிப்பு மைய தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் பன்சால்கூறினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கரு வூலத்துறை ஆணையர் விஜ யேந்திர பாண்டியன், ரிசர்வு மற்றும் பெடரல் வங்கி யின் தலைமை சந்தை யிடல் அதிகாரி ஏவிஎஸ்.மூர்த்தி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

;