districts

img

பரம்பரை மருத்துவர்களின் ஓய்வூதியம் உயர்வு

சென்னை,செப்.22- தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள 61 சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் உயர்த்தப்பட்ட ஓய்வூதிய தொகையான ரூ.3000க்கான ஆணைகளை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பய னாளிகளுக்கு வழங்கினார். தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்துள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமி யோபதி பரம்பரை மருத்து வர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கு வதற்கான ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் வியாழ னன்று (செப்.22) நடை பெற்ற நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, 11 ஓய்வுபெற்ற பரம்பரை மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினை களைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர், 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள ஆயுர்வேதா, யுனானி , மற்றும் ஓமியோபதி பரம்பரை மருத்துவர்க ளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த ஓய்வூதியம் டிசம்பர் 2011 ஆம் ஆண்டு ரூ .1000 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது நிலவிவரும் பொருளாதார சூழ்நிலையின் அடிப்படை யில், தங்களுக்கு வழங்கப் பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் வாழ்வாதார தேவைகளுக்கு போது மானதாக இல்லை. எனவே, ரூ .3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு முதல் ரூ. 3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

;