districts

img

மகாபலிபுரத்தில் தங்கும் வசதியுடன் கால்பந்து அகாடமி துவக்கம்

 சென்னை. மார்ச் 19- சென்னை அருகே மாமல்லபுரத்தில் உலகத்தரத்திலான கால்பந்தாட்ட அகாடமி ஒன்றை எஃப்சி மெட்ராஸ்  தொடங்கியுள்ளது.    அகில இந்திய கால் பந்தாட்ட கூட்டமைப்பு.  மற்றும் ஆசிய கால் பந்தாட்ட கூட்டமைப்பு ஆகியவற்றின் விதிமுறைகளுக்கு ஏற்றவாறு “ஹோம் ஆஃப் எஃப்சி மெட்ராஸ்” என்ற பெயரில் இந்த கால்பந்தாட்ட பயிற்சி மையம் செயல்படும். 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இவ்வளா கத்தில் இரவு நேரத்திலும் ஒளிவிளக்குகளின் வெளிச்சத்தில் விளை யாடுவதற்கான கால்பந்தாட்ட மைதானங்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன.   உடல்வலுவை மேம்படுத்தி உடற்தகுதியைப் பேணு வதற்கான மையம், மருத்துவ சிகிச்சை மற்றும் காயங்களி லிருந்து மீண்டு குணமடைவதற்கான சிகிச்சை மையங்கள், சர்வதேச தரத்தில் ஒரு உள்ளரங்க ஃபுட்ஸ்சால் மைதானம், 6 லேன்கள் கொண்ட நீச்சல் குளம், நவீன சமை யலறை மற்றும் உணவுக்கூடங்களுடன் கூடிய தங்கும் விடுதி, திறந்த நிலை பள்ளி கல்விக்கான தேசிய நிறு வன பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ஒரு மாற்றுவழி கற்றல் மையம் ஆகியவை இவ்வளாகத்தில் இடம்பெற்றிருப்ப தாக எஃப்சி மெட்ராஸ் கிரிஷ் மாத்ரு பூதம் தெரிவித்தார்.

;