சென்னை,மே 27-
சென்னை காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட தரமணி உதவி ஆணையராக பணியாற்றும் ஜீவானந்தம் தெற்கு பகுதி தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையராகவும், தாமஸ் மவுண்ட் உதவி ஆணையர் அமீர் அகமது தரமணிக்கும், சிலை கடத்தல் பிரிவு உதவி காவல் ஆணையர் (சிஐடி) இருக்கும் மோகன் ராயப்பேட்டை உதவி ஆணையராகவும் தலைமை அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் புலனாய்வு உதவி ஆணையராக பணிபுரியும் கண்ணன் வேப்பேரி காவல் உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளார்.