districts

img

சென்னையில் 3 ஆண்டுகளில் மலக்குழியில் 33 பேர் உயிரிழப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேதனை

சென்னை, செப். 4 - சென்னையில் 3 ஆண்டுக ளில் 33 பேர் மலக்குழி யில் விஷவாயு தாக்கி உயி ரிழந்துள்ளதாக ஞாயிறன்று மயிலாப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்ட 4வது மாநாட்டில் வேதனை தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில், தமிழ கம் முழுவதும் கடந்த 6 ஆண்டுகளில்48 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள தாக கூறுகிறது. மலக் குழிக்குள் மனிதர்களை இறக்குவதை முழுமையாக தடுத்து, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஐஐடி கல்வி நிலையம் சாதிய வன்மக் கூடமாக திகழ்வதை மாற்றுவதோடு அங்கு தொடரும் இட ஒதுக்கீடு மீறலை தடுக்க வேண்டும், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசா ணைப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் டி.அன்பழகன் வரவேற்க, துணைத் தலைவர் கே.பி.ராமு அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய உறுப்பினர் முனைவர் கோ.ரகுபதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டனும், வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பி.ஆர்.முரளியும் சமர்ப்பித்தனர். மாநில துணைச் செயலாளர் வி.ஜானகி ராமன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.மதியழகன், மாந கராட்சி மாமன்ற உறுப்பி னர் எம்.சரஸ்வதி உள்ளிட் டோர் வாழ்த்தி பேசி னர். முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ் நிறைவுரையாற்றி னார். துணைச் செயலாளர் எஸ்.சரவணசெல்வி நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ச.லெனின், செயலாளராக கே.மணிகண்டன், பொரு ளாளராக பி.ஆர்.முரளி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்ட னர்.

;