districts

காசிமேட்டில் மீன் வரத்து குறைந்தது

ராயபுரம்,மே 14-  

   வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.  மேலும் தடைகாலம் தொடங்கியது முதல் காசிமேடு மீன்மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு மீன்களே விற்பனைக்கு வந்தன.

   இந்நிலையில், ஞாயிறன்று(மே 14) மீன் வாங்க ஏராளமானோர் மார்க்கெட்டுக்கு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த மீன்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் விலையும் கடந்த வாரத்தை விட 2 மடங்கு அதிகமாக இருந்தது. சிறியவகை மீன்களான நெத்திலி, சங்கரா,  நண்டு, இறால் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இதில் பாறை, சங்கரா, கொடுவா, வவ்வால் மற்றும் சிறிய  வகை மீன்கள் வரத்து முற்றிலும் இல்லை. இதனால் சிறிய வகை வஞ்சிரம் கிலொ ரூ.900-க்கும், பெரியவகை வஞ்சிரம் ரூ.2 ஆயிரம் வரையும் விற்கப்பட்டது.