districts

img

பட்டினிப் போராட்டம்

என்எஸ்கே பேரிங்ஸ் நிர்வாகம் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பேசித் தீர்க்க வேண்டும், தொழிலாளர் துணை ஆணையர் அறிவுரையை ஏற்று மெண்டார் பிரிண்டிங் நிர்வாகம்  வேலை வழங்க வேண்டும் என  வலியுறுத்தி புதனன்று (மார்ச்.29) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் இ.முத்துக்குமார் போராட்டத்தை தொடங்கி வைத்தும், மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர் போராட்டத்தை நிறைவு செய்தும் பேசினர்.