districts

img

மூத்த குடிமக்களுக்கான குடியிருப்புகள் கட்டத்திட்டம்

சென்னை, மார்ச் 21 - மூத்த குடிமக்களுக்கு வாழ்வாதார வசதி யுடன் அதிநவீன குடி யிருப்புகளை கட்ட ஜிடி பாரதி அர்பன் டெவ லப்பர்ஸ் நிறுவன மானது, ஜிடி குழுமம் மற்றும் பாரதி ஹோம்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து சுமார் 350 கோடி ரூபாய் முதலீடு செய்து இருப்பதாக அறிவித்துள்ளது.  இந்த முதலீடானது அடுத்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்நிறுவனம் தெரி வித்துள்ளது. முதல் கட்டமாக மூத்த குடிமக்களுக்கான வீடுகளை எலிமெண்ட் கட்டுமான நிறுவனம் மூலம் சென்னையில் கட்டத் திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்ய உள்ளது.   அடுத்த மூன்று ஆண்டுகளில், ஜிடி பாரதி நிறு வனம் குறைந்தபட்சம் 20 ஓய்வூதிய குடியிருப்புகள் மற்றும் அவர்களுக்கான வாழ்க்கைமுறை வசதிகளை வழங்கு வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது, இது முதி யோர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் என்று எலிமெண்ட் நிறுவனத்தின் இயக்குநர் அஸ்வின் குமார் கூறினார்.