கடலூர், செப்.30- காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு காது கேளாத, வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பொது நிகழ்ச்சிகளில் சைகை மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும், கல்வித் தகுதி அடிப்படையில் வேலை யும் ஒரு சதவீதம் இட ஒதுக்கீடும் அமலாக்க வேண்டும், தனியார் துறை வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் இலவச செல்போன் வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகை 5 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.எம்.வசந்தகுமார் தலைமை தாங்கினார் பி. சிவக்கொழுந்து, ஜி. ராஜராஜன், கே.சாமிதுரை, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்டத் தலைவர் ராம.நடேசன், மாவட்டச் செயலாளர் ஆர். ஆளவந்தார் மாவட்ட பொருளாளர், எஸ். கோபாலகிருஷ்ணன், ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.