districts

img

கோகுல்ஸ்ரீ தாயாருக்கு அரசு பணி வழங்குக! முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை, பிப்.15 - செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயின் தாயார் பிரியாவிற்கு அரசு பணி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று கோகுல்ஸ்ரீ தாயார் பிரியாவிற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் ஒரு வீடும் ஒதுக்கி முதலமைச்சர் உத்தர விட்டார். மேலும், கூர்நோக்கு இல்லங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை புதனன்று (பிப்.15) கட்சி யின் மாநிலக்குழு அலு வலகத்தில் பிரியா சந்தித்து நன்றி தெரி வித்தார். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், “பிரியாவிற்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரியாவை கடத்தி சித்ரவதை செய்த சிவக்குமார் உள்ளிட்ட 4 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், கூர் நோக்கு இல்லங்களில் மரணங்கள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். பிரியா குறிப்பிடும் போது, “கோகுல்ஸ்ரீ கொலை வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்வின்போது மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ப.சு.பாரதி அண்ணா (செங்கல்பட்டு), தாம்பரம் தொகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;