districts

img

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை: 3 ஆயிரம் பேர் குவிந்தனர்

விழுப்புரம், செப். 24- விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரம் பேர் குவிந்தனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான இளம் அறிவியல் மற்றும் பி.ஏ., பி.காம். உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் 2 ஆயிரம் இடங்களுக்கு சுமார் 17 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படை யில் சேர்க்கை நடை பெற்று வருகிறது. இத னிடையே எஞ்சியுள்ள இடங்களுக்கான இறுதிக் கட்ட மாணவர் சேர்க்கை வருகிற 28, 29 ஆகிய தேதி களில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ப வர்கள் தங்களின் கட்-ஆப் மதிப்பெண் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி பி.எஸ்சி., இளம்அறிவியல் பாடப்பிரிவுக்காக பதிவு செய்வதற்கு காலை 10 மணி முதல் மதியம் 2 மணிக்குள் விண்ணப்பங்களை அளிக்க லாம் என அறிவிக்கப்பட் டிருந்தது. இதற்காக காலை 8 மணி முதலே மாணவ, மாணவிகள், அரசு கல்லூரி முன்பு குவிந்த னர். எஞ்சியுள்ள சுமார் 300 இடங்களுக்கு 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாண வர்கள் குவிந்ததால் கல்லூரி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அதோடு அங்குள்ள கல்லூரி சாலையில் போக்கு வரத்து நெரிசலும் ஏற்பட்டது. பின்னர் காவல் துறை பாதுகாப்புடன், மாண வர்கள் கல்லூரிக்குள் அனு மதிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை (செப். 24) பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வர லாறு, பொருளியல், பி. காம். உள்ளிட்ட பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கைக்கான பதிவு நடைபெற்றது. இந்த விண்ணப்பங்கள் பரி சீலனை செய்யப்பட்டு கட்- ஆப் மதிப்பெண் தகுதியின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

;