districts

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் இந்து முன்னணி 29 பேர் மீது வழக்கு

சென்னை, செப்.5- தமிழகத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந் துள்ளது. சில இடங்களில் மட்டுமே சிறிய அளவிலான  தகராறுகள் நடைபெற்றுள் ளன.   சென்னையில் பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலை களும் ஊர்வலமாக எடுத்துச்  செல்லப்பட்டு கடலில் கரைக் கப்பட்டன. 5 ஆயிரம் சிலை கள் வரையில் கரைக்கப் பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தை குறிப்பிட்ட சாலைகள் வழியாக மட்டுமே நடத்த வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இந்த நிலையில் திருவல் லிக்கேணி நெடுஞ்சாலை-பை கிராப்ட்ஸ் ரோடு சந்திப்பில் விநாயகர் ஊர் வலத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக செல்ல முயன் றனர். அவர்களை போலீசார்  தடுத்து நிறுத்தி கைது செய்த னர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவித்தனர். இந்த நிலையில் இந்து  முன்னணி அமைப்பை சேர்ந்த 29 பேர் மீது   ஜாம்பஜார் காவல்நிலையத் தில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. தடையை மீறி செயல்பட்டதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது.

;