districts

img

அடுத்த தலைமுறை நீரிழிவு சிகிச்சைக்காக டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சேவைகள்

சென்னை, அக்.6- சென்னை கோபாலபுரத் தில் உள்ள டாக்டர் மோகனின் நீரிழிவு சிறப்பு  மையம், அடுத்த தலை முறைக்காக நீரிழிவு சிகிச்சை குறித்த தகவல் களை செல்பேசியில் அறிந்து கொள்ளும் வகையில் 3 சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறி வுடன் இவை இயங்கும். இத்தகைய சேவைகள்  நீரிழிவு சிகிச்சை முறையில் அடுத்த கட்டத்தின் ஒரு பகு தியாகும்.   நீரிழிவு நோயாளி களுக்கு தானியங்கி முறை யில் உதவக்கூடிய மூன்று டி’-க்கள் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டன. டயா, டயலா, டயானா என்பதே அவை. தானியங்கி முறையில் நோயாளிகளுடன் சாட்  செய்யும் டயா, நோயாளி களுக்கு நண்பன்போல் செயல்படும்செயல்பட்டு நீரிழிவு குறித்த தகவல் களை தெரிவிக்கும் டயலா  செயலி, ‘துல்லியமான நீரிழிவு சிகிச்சைக்கான உடல்நல பராமரிப்பு செயலி யான டயானா ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு நன்கு பயன்படும் என்று இதனை அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர். ஏ. மோகன், நிர்வாக இயக்குநர் டாக்டர் அஞ்சனா ஆகியோர் தெரிவித்தனர்.   புதிய சேவையால் 24  மணி நேரமும் நோயாளி களுக்கு மருத்துவ நிபுணர் களின் ஆலோசனைகள் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறினார்.

;