districts

மீனவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் கோரி முற்றுகை போராட்டம் மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

சென்னை, ஜன.7- தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தண்டையார் பேட்டையில் சிங்காரவேலர் சிந்தனை கழகத்தில் மாநில செயல்  தலைவர் எம்.கருணாமூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் வி.குமார் பங்கேற் றார். மாநில பொதுச் செயலாளர் எஸ். அந்தோணி, பொருளாளர் எஸ்.ஜெயசங்க ரன் மற்றும் மாநில நிர்வாகிகள் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மீனவர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மறுப்பதை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மீனவர் நல வாரிய உறுப்பினர்களிடம் ஆண்டு சந்தா பெற்றும், மீன் ஏற்றுமதியாளர்கள், ஐஸ் கம்பெனிகள், மீன்பிடி தொழிலா ளர்கள் பயன்படுத்தும் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்ற மீன்பிடி சார்ந்த தொழில்கள் மூலம் பணம் வசூ லித்தும், லட்சக்கணக்கில் வாரியத்தில் இருப்பு இருந்தும் மீனவர்களுக்கு வாரி யத்தில் கடந்த கால ஆட்சியை போல தற்போதைய தமிழக அரசும் ஓய்வூதியம் மறுப்பதை கண்டித்தும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இதர வாரியங்கள் போல் தொழிலாளர் நலத்துறை மூலம் தனி அலுவலர், அலுவல கம் அமைத்து மீனவர் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும், மீனவர் நல வாரியத்தில்பெண்களுக்கு ஓய்வூதியமாக 55 வயதிலும் ஆண்களுக்கு 60 வயதிலும் ரூ 3 ஆயிரம் வழங்க வேண்டும் என  சட்டமன்றம் கூடுவதை முன்னிட்டு மீனவர் மானிய கோரிக்கைகளை முன்வைத்து வட சென்னை காசிமேட்டில் உள்ள மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் முன்பாக பிப்ரவரி 3ஆம் தேதி அன்று மாபெரும் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்திட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநிலக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லி   பேரணி
மீனவர்களின் கோரிக்கையை முன் வைத்து ஏப்ரல் 3 அன்று தில்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடைபெரும் மாபெரும் மீனவர்கள் பேரணியை வெற்றிகரமாக்கிட தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மீனவர்களை திரட்டி பங்கேற்பது எனவும் மீனவர்களின் கோ ரிக்கை முன்வைத்து மாநில அளவில் கோரிக்கை மாநாடு தஞ்சாவூரில் ஜூன் 3 அன்று நடத்துவது எனவும் இந்தகூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜி.செலஸ்டின் (தலை வர்), எம்.கருணாமூர்த்தி (செயல் தலைவர்), எஸ்.அந்தோணி (பொதுச்செய லாளர் ), எஸ்,ஜெயசங்கரன்(பொருளாளர்) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

;