districts

வெள்ள தடுப்பு பணி: சென்னைக்கு ரூ.500 கோடி

சென்னை, மார்ச் 18- சென்னை பெருநகரில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். 2022-23 ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை வெள்ளியன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து அவர் பேசியதாவது: அரசு நிலங்களில் நிலஅளவைப் பணிகள் துல்லியமாகவும் எளிதாகவும் மேற்கொள்ள, “தொடர்ந்து இயங்கும்  தொடர்பு நிலையங்களின் அமைப்பு” வலுப்படுத்தப்படும். நவீன முறையில்  நிலஅளவைப் பணிகளை மேற்கொள்ள  நிலஅளவையர்களுக்கு “ரோவர்” கருவிகள் வழங்கப்படும். இத்திட்டத் திற்காக 15 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. 

உயர்மட்ட சுற்றமைப்புடன் சாலை மேம்பாலம்
காட்டுப்பாக்கம் சந்திப்பு என்பது சென்னை-சித்தூர்- பெங்களூரு சாலை, மவுண்ட் -பூந்தமல்லி - ஆவடி சாலை மற்றும் பூந்தமல்லி- குன்றத்தூர் - பல்லாவரம் சாலை போன்ற முக்கியச்சாலைகள் கூடும் இடமாகும். இந்த சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.322 கோடி மதிப்பீட்டில், உயர்மட்ட சுற்றமைப்புடன் கூடிய சாலை மேம்பாலம் கட்டப்படும். இதன் முதற்கட்டமாக விரிவான திட்ட அறிக்கை இவ்வாண்டு தயாரிக்கப்படும்.

ஆர்கே நகரில் ரூ.10 கோடி செலவில் விளையாட்டு வளாகம்
உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் வடசென்னை ஆர்.கே. நகர் பகுதியில் முதற்கட்டமாக ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளுக்கு புகழ்பெற்ற வட சென்னையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை அரசு உருவாக்க உள்ளது. கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச் சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சி கூட வசதிகளுடன் சென்னை ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதல்கட்டமாக ரூ.10 கோடி செலவில் இவ்வளாகம் அமைக்கப்பட உள்ளது..

6 வழிச்சாலையாகிறது கிழக்கு கடற்கரை சாலை
. போக்குவரத்து நெரிசலை குறைக்க கிழக்குக் கடற்கரை சாலை 6 வழிச்சாலையாக மாறுகிறது. திருவான்மியூர்,கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளில் இச்சாலையை அகலப்படுத்துவதற்கு, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சோழிங்கநல்லூரில் உள்ள மீதமுள்ள சாலைப் பகுதி 135 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும்.  மாமல்லபுரத்திற்கு அப்பால் உள்ள கிழக்குக் கடற்கரை சாலை தேசிய நெடுஞ்சாலைகள்ஆணையத்திடம் ஒப்படைப்பது தொடர்பான சிக்கல் தீர்க்கப்பட்டு, நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்

 

நிலக்குத்தகைக் கொள்கை
அரசு நிலங்களின் குத்தகை முறை யில் தற்போது உள்ள சிக்கல்களைத் தீர்க்கவும், அரசு நிலங்களை நியாய மான, வெளிப்படையான முறை யில் குத்தகைக்கு விடுவதற் கும் ஒரு விரிவான நிலக்குத்தகைக் கொள்கை வகுக்கப்படும்.         

ஆக்கிரமிப்பு மீட்புக்கு  ரூ.50 கோடி
அரசு நிலங்களைப் பாதுகாப்ப தற்கும், பராமரிப்பதற்கும், ஆக்கிர மிப்புகளில் இருந்து மீட்பதற்கான பணிகளை மேற்கொள்ளவும், சிறப்பு நிதியாக 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.      

பேரிடர் எச்சரிக்கை அமைப்பு
 பேரிடர் தாக்கும் முன், உரிய  நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவ தற்கு, வானிலை பலூன் அமைப்பு, இரண்டு வானிலை ரேடார்கள், 100 தானியங்கி வானிலை மையங்கள், 400 தானியங்கி மழைமானிகள், 11 தானியங்கி நீர்மட்டக் கருவிகள், அதி வேகக் கணினிகள் (சூப்பர் கம்ப்யூட்டர்) உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஓர் கட்ட மைப்பை அரசு உருவாக்கும். இப்பணி களுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.