வங்கி அரங்க மூத்த உறுப்பினர் - பாரத ஸ்டேட் வங்கி ஓய்வு பெற்ற அதிகாரி அகோரபாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாள் சென்னை மாடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அனுசரிக்கப்பட்டது. சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி. செல்வா, வங்கி அரங்க இடைக் கமிட்டி செயலாளர் எஸ் வி வேணுகோபாலன், வங்கி அரங்க நிர்வாகிகள் எஸ் வெங்கட்ராமன், ஜி. பாலகிருஷ்ணன், கல்யாண் குமார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி எஸ் பிரேமலதா, மாடம்பாக்கம் கட்சிக் கிளை உறுப்பினர்கள் வேதநாயகம், தினகரன், நாகராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.