districts

img

காலிப்பணியிடங்களை நிரப்பிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

சென்னை, மே 9- மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியி டங்களை நிரப்ப வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சென்னை மேற்கு கிளை அண்ணா நகர் மற்றும் எம்ஆர்டி கொரட்டூர் மைய அலுவலக 11ஆவது மாநாடு கோட்டத் தலைவர் கே.கோவிந்தராஜன் தலைமையில் சனிக்கிழமை (மே 7) நடைபெற்றது. சிறப்பு நிலை முகவர் எஸ்.மாரி முத்து சங்க கொடியை ஏற்றி னார். துணைத் தலைவர் கார்த்திகேயன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் மாநா ட்டை துவக்கி வைத்தார். கோட்டச் செயலாளர்கள் சி.அஜிகுமார், எஸ்.வெங்க டேசன் ஆகியோர் வேலை அறிக்கையை சமர்ப்பித் தனர். ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், மேற்கு கிளைத் தலைவர் எஸ்.எஸ்.கணேஷ்ராவ், செயலாளர் எஸ்.தசரதன், பொருளாளர் முனியாண்டி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசி யேஷன் மாநில பொதுச் செயலாளர் கே.அருள்செல் வன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநாட் டில் இணைச் செயலாளர் டி.ரவி வரவேற்றார். நிர்வாகக் குழு உறுப்பினர் எச்.பாபு நன்றி கூறினார்.  புதிய துணை மின் நிலையங்களில் உரிய பணி யிடங்களை அனுமதிக்க வேண்டும், புதிய பங்களிப்பு பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியி டங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப் பட்டன. புதிய தலைவராக கே.கோவிந்தராஜ், செயலா ளராக டி.ரவி உள்ளிட்ட 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

;