districts

img

ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்துக! மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஆக. 1 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் நாகப்பட்டினம் கிளையின்  10 ஆவது மாநாடு மயிலாடுதுறையில் நடைபெற்றது. தோழர் எஸ்.பஞ்சரத்தினம் நினை வரங்கில் நடைபெற்ற மாநாட்டிற்கு திட்ட தலைவர் எஸ்.சிவராஜன் தலைமை  வகித்தார். கோட்டத் துணைத்தலைவர் என்.சீனிவாசன் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜா ராமன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.  சிஐடியு மாவட்ட தலைவர் சீனி.மணி, நாகை மாவட்ட செயலாளர் கே. தங்கமணி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட இணை செயலாளர் ஆர்.ராமானுஜம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி உரை யாற்றினர். அமைப்பின் திருச்சி மண்டல  செயலாளர் எஸ்.அகஸ்டின் சிறப்புரை யாற்றினார். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை அறிவித்து அமைப்பின் மாநில செயலாளர் ஆர்.ரவிக்குமார் நிறைவுரையாற்றினார். மயிலாடுதுறை கோட்ட இணைச்செயலாளர் ஜி. ஆனந்தன் நன்றி கூறினார். புதிய திட்ட தலைவராக என்.வெற்றி வேல், திட்ட செயலாளராக எம். கலைச் செல்வன், பொருளாளராக எம்.கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர்.  ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் படுத்த வேண்டும். விவசாயிகள், தொழி லாளர்கள், நுகர்வோர் நலன் கருதி  பொதுத்துறையாக மாற்றி மின்சாரத் துறையை பாதுகாக்க வேண்டும். பகுதி  நேரப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த  வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.