districts

img

8 மணி நேர வேலை முறையை அகற்றும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா

8 மணி நேர வேலை முறையை அகற்றும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து திங்களன்று (ஏப். 24) தமிழ்நாடு  முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மத்தியசென்னை மாவட்டத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதிக்குழு சார்பில் மேதின பூங்கா அருகிலும், எழும்பூர் பகுதிக்குழு சார்பில் புரசைவாக்கத்திலும், தென்சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டிலும், மயிலாப்பூர் பகுதிக்குழு சார்பில் அம்பேத்கர் பாலம் அருகிலும் போராட்டம் நடைபெற்றது.