சென்னை, ஜூன், 16-
லயன்ஸ் இன்டர்நேஷனலின் நான்காவது வட்டமேசை மாநாட்டில் மக்களவை தலைவர் ஓம் பிர்லா கலந்துகொண்டு 20 தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எஸ்டிஜி விருதுகளை வழங்கினார்.
தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பருவநிலை மாற்றம், பாலின சமன்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் இவர்களின் முயற்சிகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசிய மக்களவைத் தலைவர் “இளைஞர்களின் புதிய சிந்தனையால் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது. இன்று இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்தியாவின் அறிவுசார் திறனும் அதிகரித்துள்ளது என்றார். லயன்ஸ் கிளப் சர்வதேச துணைத்தலைவர் ஏ.பி. சிங், நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.