districts

img

வளர்ந்து வரும் அழகியல் பல் மருத்துவம்

சென்னை, மார்ச் 24 உடலில் குறைபாடுகள் இருந்தால் மருத்துவரை பார்த்து  மருந்து மாத்திரைகள் வாங்கி உட்கொள்வது ஒரு வகை. மற்றொரு வகை நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்கள் தங்களை மேலும் அழகாக மாற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள், புதிய மருத்துவ சாதனங்கள் மனிதனை மேலும் அழகாக காட்ட உதவுகிறது. இந்த வகையில் வசீகர புன்னகைக்கு சவீதா பல் மருத்துவ கல்லூரி நவீன தொழில்நுட்பத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கிறது.  அழகியல் பல் மருத்துவத்தைப் பொறுத்தவரை இந்த தொழில்நுட்பம் தனிப்பட்ட நபரின் புன்னகையை வடிவமைக்கவும், பற்களை 3D வடிவில் அச்சிட்டு பொருத்துவதற்கு முன் அதை ஒருமுறை பார்க்கவும் முடியும்.   மேலும் பற்கள் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களை புதிதாக வடிவமைக்கப்பட்ட பற்களை பொருத்திக் கொள்ளவும் விரும்புகிறார்கள்.