districts

ஈஸ்டர் பண்டிகையொட்டி சிறப்பு ரயில்

சென்னை, மார்ச் 28- ஈஸ்டர் பண்டிகையையொட்டி சென்னை  தாம்பரம் முதல் கேரளா கொச்சுவேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் பொது மக்கள் தங்கள் சொந்த  ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்ற னர். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சென்னை தாம்பரம் முதல் கேரள மாநிலம்  கொச்சுவேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படு கிறது. இதில் 16 படுக்கை வசதி பெட்டிகளை  உடைய இந்த ரயிலில், 4 முன்பதிவில்லாத  பெட்டிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளும் உள்ளன. தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06043) ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 31) மதியம் 2.15 மணிக்கு புறப்படும். சென்னை எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஒட்டப்பாலம், திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கணா சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரா, காயம்குளம், கொல்லம் வழியாக திங்கட்கிழமை (ஏப். 1) முற்பகல் 11.30 மணிக்கு கொச்சுவேலி அடையும். அதேபோல் மறு மார்க்கமாக கொச்சு வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06044) திங்கட்கிழமை (ஏப் 1) மதியம்  2.30 மணிக்கு கொச்சுவேலியில் புறப்பட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 2) முற்பகல் 10.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

;