districts

சென்னையில் போதை பொருள் விற்பனை: 109 பேர் கைது

சென்னை, செப். 11- சென்னையில் கடந்த 7 நாட்கள் நடைபெற்ற சிறப்பு சோதனையில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 109 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரி வித்துள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக “புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனை களை சென்னை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தலை மையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தங்க ளது காவல் நிலைய எல்லை களில் தீவிரமாக கண்காணித்து, குட்கா மற்றும் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப் படையினர் கடந்த 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரி வித்துள்ளது. இதில், 236.65 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்டுகள், 39.12 கிலோ மாவா மற்றும் மூலப்பொருட்கள், 1 செல்போன், 1 இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்தனர். சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவ தால், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் உள்பட சட்டவிரோத பொருட் களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நட வடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

;