districts

வடபழனியில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை,டிச.27- வடபழனி ஆற்காடு சாலையில் மாநக ராட்சி மகப்பேறு மருத்துவமனை முதல் தெற்கு சிவன் கோவில் தெரு வரை தற்போதுள்ள 525 மிமீ விட்டமுள்ள குடி நீர்க் குழாயுடன் 500 மிமீ விட்டமுள்ள குடிநீர் குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் டிச.28, 29 ஆகிய நாட்களில் பகுதி-8, 9 மற்றும் பகுதி-10ஆகிய பகுதிகளில் குடிநீர் விநி யோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் கூறியுள்ளது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள பகுதிப் பொறியாளர்-8  (அண்ணா நகர்)    கைபேசி எண்.8144930908, தேனாம் பேட்டை 9ஆவது பகுதி பொறியாளர் 8144930909 , கோடம்பாக்கம் 10ஆவது பகுதிப் பொறியாளர்  8144930910 ஆகிய அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என அலுவலக குறிப்பு தெரிவித்துள்ளது.

;