மதுரை - வாரணாசி தனியார் ரயில் இயக்கத்தை கண்டித்து டிஆர்இயூ சென்னை டிவிஷன், ஒர்க்ஷாப் டிவிசன், எக்ஸ்ட்ரா டிவிசன் சார்பில் சென்னை மூர்மார்க்கெட் வளாகம் அருகே துணைப் பொதுச்செயலாளர் எஸ்.அருண்குமார் செழியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுச்செயலாளர் வி.ஹரிலால், பென்ஷனர் சங்கத்தின் தலைவர் ஆர்.இளங்கோவன், ஜோனல் துணை தலைவர் ஜி.சிவகுமார், எக்ஸ்ட்ரா டிவிஷன் தலைவர் பி.சுரேஷ், இணை பொதுச்செயலாளர் ஏ.வெங்கட்ராமன், ஒர்க்ஷாப் டிவிசன் செயலாளர் சிகாமணி ஆகியோர் பேசினர்.