districts

img

டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் சர்வதேச ஆண்கள் தின கொண்டாட்டம்

சென்னை, நவ.19- சர்வதேச ஆண்கள் தினம் சனிக்கிழமை யன்று (நவ.19) சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் ஆண்களுக்கான சிறப்பு மருத்துவமனை, சர்வதேச ஆர்த்தோ  கேர் மற்றும் சிகிச்சை மையம் சார்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்க ளாக பங்கேற்ற விளையாட்டு நட்சத்தி ரங்கள் குத்துச்சண்டை வீரர் வி.தேவரா ஜன், ஆக்கி வீரர் என்.முகமது ரியாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி டாக்டர் டி.காமராஜ் பேசுகையில், சர்வ தேச அளவில் ஆண்களின் வாழ்நாள் வயது  பெண்களின் வயதைவிட 5 வயது குறைவு,  தொழிற்சாலை விபத்துகளில் பலியாவோர் 92 விழுக்காடு ஆண்களே. மது, போதைக்கு அடிமையாகி பாதிக் கப்படுவதும் ஆண்களே. உலக அளவில் ஆண்களின் விந்தணு உற்பத்தி 50 விழுக்காடு குறைந்துவிட்டதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் ஆண்களை  விழிப்புணர்வால் மட்டுமே  பாதுகாக்கமுடியும் என்றார்.சர்வதேச ஆண்கள் தினத்தையொட்டி ஆண்க ளுக்கான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனை பெற 24 மணி நேரமும் இயங் கும் உதவி எண் 98412 66666 அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்களுக்கான சிகிச்சை தொடர்பாக 2 நவீன கருவிகள் துவங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் ெஜயராணி காமராஜ், ராதாகிருஷ்ணன், சித்தார்த், நிவே திதா ஆகியோர் பங்கேற்றனர்.