பயிற்சி பெற்ற அனைத்து இந்துக்களையும் அர்ச்சகராக்க வேண்டும், பிராமணர் அல்லாத அர்ச்சகர்களை பணி நீக்கம் செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாரபில் துண்டு பிரசுர பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிரசுரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவிடம் கட்சியின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா வழங்கினார்.