districts

img

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்...

ஒன்றிய பாஜக மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.வேலு தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில  துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.ஆறுமுகம், கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் டி.மாயக்கிருஷ்ணன் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


ஒன்றிய அரசின் பட்nஜட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி குறைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சத்யா, சிவாஜி, தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், நிர்வாகிகள் எம்.பிரகநாதன், எஸ். ராமதாஸ், அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.