தமிழ் நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வேலூர் கிளை சார்பாக டிச 20 ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கெஜராஜ் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் அருள் துவக்க உரையாற்றினார். மாநில தலைவர் சத்தியநாராயணன், மாநிலகுழு உறுப்பினர் ஜனார்த்தனன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். செயற்குழு உறுப்பினர் தாமோதரன் நன்றி கூறினார்.