districts

img

ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

சென்னை, மே 17 - 70வயது கடந்த ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தி செவ்வாயன்று (மே 17) நந்தனம் ஓய்வூதிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின்  (டிஎன்ஜிபிஏ)  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து ஓய்வூதியர் சங்கங்களின் தேசிய ஒருங்கிணைப்புக்குழு மாநிலத் தலைவர் மோகன் பேசினார். தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சென்னை மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் மாவட்டச் செயலாளர் கு.வீரராகவன், தமிழ்நாடு ஓய்வு பெற்ற  பள்ளி - கல்லூரி ஆசிரியர் நலச் சங்க சென்னை மாவட்ட பொருளாளர் கு.பூபாலன், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்  மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஓய்வூதியர் நலச்சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.நாராயணசாமி, டிஎன்ஜிஏபிஏ மாவட்டச் செயலாளர் என்.ராமசாமி உள்ளிட்டோர் பேசினர். அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நெ.இல.சீதரன் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ம.சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக கே.உதயகுமாரி வரவேற்றார்.