districts

சென்னையில் குறைந்து வரும் கொரோனா உயிரிழப்புகள்

சென்னை, மே 17- சென்னையில் உயிரிழப்புகள் குறைந்து வரும் அதே நேரத்தில் கொரோனா பாதிப்பும்  படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 12ஆம் தேதி 7,564 பேர் பாதிக்கப்பட்ட நிலை யில் தினசரி பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக் அதிகரித்து வந்தது. மேலும் உயிரி ழப்புகளும் வேகமாக அதிகரித்து வந்தன. கடந்த 11ஆம் தேதி தினசரி உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டி, ஒரே நாளில் 92 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 100ஐ தொட்டு விடும் என அஞ்சப்  பட்டது. ஆனால் அதன்பிறகு கொரோனா உயிரிழப்புகள் சென்னையில் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. 12ஆம் தேதி 89 பேர்  பலியாகி இருந்த நிலையில் 13ஆம் தேதி 88  பேரும், 14ஆம் தேதி 74 பேரும் என உயிரிழப்ப வர்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொரோ னாவுக்கு 60 பேர் மட்டுமே உயிரிழந்தனர். இது  சென்னை மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வி‌ஷயமாகவே உள்ளது. அதே  நேரத்தில் அதிகாரிகளும் கொரோனா உயிரி ழப்புகளை மேலும் குறைப்பதற்கான நட வடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.

;