tamilnadu

கோவை : கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றதா ?

கோவை, ஆக. 5 -  கோவையில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் மறைக்கப்படும் தகவல் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை சார்பில் தினமும் மீடியா புல்லடின் என்ற பெயரில் கொரோனா பாதிப் புகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி கோவை மாவட்டத்தில் புதன்கிழமை வரை 5 ஆயிரத்து 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், அதில் 85 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது கொரோனா பாதிப்புகள் மற் றும் உயிரிழப்புகள் குறைத்து காட் டப்படுவதோடு, உண்மை நிலவரம் மறைக்கப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கோவை  மாவட்ட நிர்வாகம் வெளியிட் டுள்ள கொரோனா பாதிப்பு விவரங் களின் மூலம் இத்தகவல் வெளியாகி யுள்ளது. அதன்படி கோவையில் புத னன்று  6 ஆயிரத்து 746 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதே போல் இதுவரை கொரோனா தொற்று பாதித்த 130 பேர் உயிரி ழந்துள்ள தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், கோவை அரசு மருத்துவ மனையில் 48 பேரும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.

பிஎஸ்ஜி மருத்துவமனையில் 32 பேரும், கேஎம்சிஹெச் மருத்துவமனையில் 3 பேரும், கோவில்பாளையம் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் 2 பேரும், சென்னை மருத்துவமனை மற்றும் ராயல் கேர் மருத்துவமனை யில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ள னர். 4 ஆயிரத்து 902 பேர் குண மடைந்து வீடு திரும்பியுள்ள நிலை யில், ஆயிரத்து 714 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள 73 பேருக்கு சிகிச்சை யளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கோவை மாவட் டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சிகிச்சை மையங்களும், படுக்கை  வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள் ளன.

நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்க 4 ஆயிரத்து 897 படுக்கை கள் அமைக்கப்பட்டுள்ளன. 15  தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. பகுதி வாரியாக மேலும் 10 அரசு மருத்துவமனைகள் சிகிச் சையளிக்க படுக்கை வசதி ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது.

5 தனியார் கல்லூரிகளில் ஆயிரத்து 620  பேருக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

;