districts

img

தி.மலை மாவட்டத்தில் நிரம்பி வரும் அணைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது.  119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 99 அடி தண்ணீர் உள்ளது.  59 அடி உயரமுள்ள குப்பநத்தம் அணையில், தற்போது  55 அடி நீர்மட்டம் உள்ளது. 22.97 அடி உயரம் கொண்ட மிருகண்ட அணையில் தற்போது 18.37 அடி உயரம் தண்ணீர் உள்ளது. 62.32 அடி உயரம் கொண்ட செண்பகத் தோப்பு அணையின் தற்போது 56.25 அடி உயரம் தண்ணீர் உள்ளது.