districts

புதுச்சேரியில் மே 24 வரை ஊரடங்கு நீட்டிப்பு

புதுச்சேரி, மே. 9- கொரோனா பெருந்தொற்றால் புதுச்சேரி யில் நாளுக்கு நாள் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு தமிழ கத்தை பின்பற்றி 10ஆம் தேதி நள்ளிரவு  முதல் மே 24 வரை ஊரடங்கு அறிவித்துள் ளது.  காய்கறிகள், மளிகை பொருட்கள், இறைச்சி கடைகள் பகல் 12 மணி வரை  செயல்படும். மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும். தனியார் பேருந்து, ஆட்டோ, வாடகைக் கார் ஆகிய பொது  போக்குவரத்து இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், நகராட்சி, தீய ணைப்புத்துறை, நீதிமன்றங்கள், ஏடிஎம் நிறு வனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள்,  இணையதள சேவை வழங்கும் நிறு வனங்கள், குடிநீர் வழங்கல், தூய்மைப் பணி, மின்துறை, வீட்டு வேலை, தனியார் காவ லர் சேவை வழக்கம் போல் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் காப்பீட்டு நிறுவனங்கள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. பொது சேவை களில் ஈடுபடுபவர்கள் உரிய அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்  டும் என்று புதுச்சேரி அரசின் உயர்மட்ட குழு  செயலாளர் அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

;