கடலூர், ஜூன் 7-
விருத்தாசலம் அருகே முகுந்த நல்லூர் கிராமத்தில் அனுமதியின்றி வெட்டிய மரங்களை டிராக்டர் வண்டி யோடு தப்பிக்க வைத்த வருவாய்த் துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாராட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம், முகுந்த நல்லூர் ஊராட் சிக்கு உட்பட்ட தர்மகுளம் கரையில் இருந்த புளிய மரம், வேப்ப மரம், கொடுக் காப்புளி மரங்களை அனு மதி இல்லாமல் ஊராட்சி மன்றத் தலைவர் தேன் மொழியின் கணவர் கணே சன் வெட்டி விற்பனைக்கு எடுத்துச் செல்லமுயன்றார். இதனை தடுத்து நிறுத்தி வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் வெட்டபட்ட மரங்களோடு டிராக்டரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த னர்.
ஆனால், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கணேசன் மீது எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை. அனுமதி இன்றி மரங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகன உரிமையாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கா மல் கருவேல மரங்களை வெட்டியதாக கூறி விடுவித் துள்ளனர். இதுகுறித்து சாராட்சியர் உரிய விசா ரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலைச்செல்வன், நெல்சன் தலைமை வகித்தார்.