வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் து.மு.கதிர்ஆனந்துக்கு ஆதரவாக சிபிஎம் வேலூர் வடக்கு தாலுகா கமிட்டி சார்பில் வாகன பிரச்சாரம் நடைபெற்றது. அலமேலு மங்காபுரம், வள்ளலார், காந்திநகர், சத்துவாச்சாரி, ஆர்டிஒ சாலை பகுதிகளில் வீதிவீதியாகச் சென்று துண்டுபிரசுரங்கள் வழங்கி தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் தலைமையில் வாக்கு சேகரித்தனர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன், செ.ஏகலைவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், குப்பு, கமிட்டி ணணஉறுப்பினர்கள் என்.கன்னியப்பன், பழனி மற்றும் முத்து.சிலுப்பன், முகமதுசயி(திமுக), ரீகன் (விசிக) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக நவயுகா கலைக்குழுவினர் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரச்சாரம் மேற்கொண்டனர்.