districts

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்றால் சிங்கம் பலி

வண்டலூர், ஜூன் 4- வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நீலா  என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான உயிரியல் பூங்கா வாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் தீவிரமடைந்த தையடுத்து, கடந்தாண்டு மார்ச், 17ஆம் தேதி முதல் மூடப் பட்டது. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், நவம்பர்  மாதம் 11ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன் பின், ஓரளவு  பார்வையாளர்கள் வந்தனர்  இந்நிலையில் தொற்று பரவலை தடுக்க, பூங்கா கடந்த  ஏப்ரல் 20ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும்  என அறிவிப்பு வெளியானது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்பூங்காவில் வெள்ளைப்புலிகள், வங்கப்புலி கள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்குகள்,  காண்டாமிருகம், நீர் யானை உள்ளிட்ட முக்கிய விலங்குகள் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி  அதில் பதிவாகும் காட்சியில் விலங்குகளின் செயல்பாடுகளை யும், நடவடிக்கைகளையும் தொடர்ந்து 24 மணி நேரமும்  பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.   இந்நிலையில் இங்குள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்க ளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்  ளது. அதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிழந்துள்  ளது. இதனால் மற்ற  சிங்கங்களை தனிமைப்படுத்தும் பணியில்  பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

;