சட்டமேதை அம்பேத்கரை அவமரியாதையாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வியாழனன்று (டிச.19) நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் கிளைத்தலைவர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ச.ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் பேசினர்.